மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சுக்கிரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு – பஞ்சம ஸ்தானத்தில் குரு(வ) – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – பாக்கிய ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி வழியில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலை பளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம்.
முதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். கலைத்துறையினருக்கு மிகப் பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ் ,பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள். மாணவமணிகள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெருவெற்றி பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – சுக ஸ்தானத்தில் குரு (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் புதன் – லாப ஸ்தானத்தில் சூரியன் – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டாகும். நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலர் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். தொழிலை விரிவுபடுத்துவற்கு உண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.
கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்று அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சந்தனம், குங்குமம் கொடுத்து வழிபடவும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ) – களத்திர ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் புதன் – தொழில் ஸ்தானத்தில் சூரியன் – லாப ஸ்தானத்தில் சுக்கிரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகநிலை உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் சிக்கல்கள் தீரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். காரிய அனுகூலங்களும் உண்டு. செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள்.
தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். கலைத்துறையினருக்கு பணவரவு சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும். உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று குரு பகவானை வணங்கி விட்டு வரவும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |