ஹைதராபாத்: பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘தாகு மஹாராஜ்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? – “உலகத்துக்கு ஒளி கொடுக்கும் கடவுளைப் பற்றிய கதையல்ல. அச்சுறுத்தும் பெய்களை பற்றிய கதையல்ல. ராவணனைப் பற்றிய கதையல்ல. ராஜ்ஜியம் இல்லாமல் போரிட்ட மன்னனின் கதை” என்ற பின்னணி வசனத்தின் பில்டப்பே பாலகிருஷ்ணாவின் படம் என்பதை உறுதி செய்கிறது. சில காட்சிகளில் அவர் வந்தாலும் முகத்தை முழுமையாக காட்டவில்லை. பாபி தியோல் ஒரு ஃப்ரேமில் வந்து செல்கிறார்.
“என்னை தெரிகிறதா? நான் தான் தாகு மஹாராஜ்’ என பாலகிருஷ்ணா குரல் உடன் மாஸ் பிஜிஎம் ஒலிக்க குதிரையிலிருந்தபடியே பாலய்யா என்ட்ரி கொடுக்கிறார். முழுக்கவே மாஸாக கட் செய்யப்பட்டுள்ள டீசர் ரசிகர்களுக்கு விருந்து. இப்படம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தாகு மஹாராஜ்: கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா’ படத்தை இயக்கிய பாபி கோலி இயக்கும் புதிய படம் ‘தாகு மஹாராஜ். இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா, பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரக்யா ஜெய்சல், சாந்தினி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வெளியாகும் அதே நாளில் ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. டீசர் வீடியோ: